
ஜம்மு பிராந்தியத்தின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பானிடாப் பகுதியில் ஷிவ்கர் வனப்பகுதியில் நாக் தேவ்தா கோயிலுக்கு அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது.
இரண்டு விமானிகளும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, காவல்துறை மற்றும் ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலதிக தகவல்கள் வரும்வரை எந்தவித பாதிப்பு பற்றியும் தெரியாத நிலை தற்போது உள்ளது.