
இந்திய தரைப்படை ஆளில்லா விமானங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னனு கருவிகளை தயாரித்து வருகிறது இதன் முலம் மின் உளவு தகவல்களை அதிகம் சேகரிக்க முடியும்.
இந்த கருவி தரையில் இருந்து இயங்கும் கருவிகளை விடவும் அதிக ஆற்றல் வாய்ந்தது காரணம் அதிக உயரத்தில் செயல்படும் போது தகவல்களை இடைமறிக்கும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.
தற்போதைய நிலையில் பயன்பாட்டில் உள்ள தகவல் இடைமறிப்பு மற்றும் சேகரிப்பு கருவிகள் வீரர்கள் அல்லது வாகனங்களில் கொண்டு செல்லும் வகையில் உள்ளன.
தரைப்படையின் ராணுவ தொலைதொடர்பு பொறியியல் கல்லூரி இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.