கினீயில் ராணுவ புரட்சி; அதிபர் கைது !!

ஆஃப்ரிக்க நாடான கினீயில் ராணுவ புரட்சி வெடித்துள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் ஆல்ஃபா கான்டே கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கினீ நாட்டின் தலைநகர் கோனாக்ரியில் கடுமையாக மோதல் நடந்து வந்த நிலையில் தீடிரென அந்நாட்டு சிறப்பு படையினர் அதிபர் மாளிகையை கைபற்றிய நிலையில்,

அதிபரை கைது செய்ததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர், வீரர்கள் அவரை கைது செய்து வாகனத்தில் கொண்டு செல்லும் காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிகழ்வால் கிழக்கு ஆஃப்ரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது அண்டை மற்றும் பிரதான உலக நாடுகள் நிலைமையை கண்காணித்து வருகின்றன.