சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு !!

  • Tamil Defense
  • September 23, 2021
  • Comments Off on சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு !!

சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 விமானத்தை அர்ஜென்டினா தனது விமானப்படைக்காக வாங்க போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது அர்ஜென்டினா அரசு அதிகாரப்பூர்வமாக நாங்கள் இதுவரை எந்த ஒரு போர் விமானத்தையும் தேர்வு செய்யவில்லை என அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதே நேரத்தில் சீனாவே இதுவரை இந்த விமானத்தை படையில் சேர்க்கவில்லை ஆனால் மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினா தனது விமானப்படையில் இருக்கும் பழைய விமானங்களை மாற்றிவிட்டு புதிய விமானங்களை இணைக்க மிக நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது, இதற்காக 664 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அர்ஜென்டினாவுக்கு சுவீடன் தென்கொரியா இஸ்ரேல் ரஷ்யா ஆகியவை விமானங்களை விற்க முன்வந்துள்ளன, அதே நேரத்தில் சுவீடன் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளை அர்ஜென்டினாவுக்கு விமானம் விற்க விடாமல் பிரிட்டன் தடுத்து வருகிறது.

இதற்கு பழைய ஃபால்க்லாந்து யுத்த கால பகை மற்றும் இரு நாடுகளின் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் பிரிட்டிஷ் தொழில்நுட்பங்கள் காரணமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.