இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • September 28, 2021
  • Comments Off on இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா !!

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா விமானங்கள், பிரங்கிகள், ஹெலிகாப்டர்கள் என இந்தியாவுக்கு அதிகமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளில் சுமார் 1.4 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ள நிலையில் தற்போது சுமார் ஏறத்தாழ 74,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிலையில் உள்ளன.

இந்த புதிய ஒப்பந்தங்கள் மூலமாக மீண்டும் சி130ஜே, பி8ஐ, உள்ளிட்ட தளவாடங்களை இந்தியா மீண்டும் வாங்க உள்ளது அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளது.

இது தவிர சுமார் 22,000 கோடி மதிப்பிலான சுமார் 30 எம்க்யூ-9 ப்ரடேட்டர்-பி ரக ட்ரோன்களை முப்படைகளுக்கும் சேர்த்து வாங்க உள்ளது.

பின்னர் நாசாம்ஸ்-2 ஏவுகணை தடுப்பு அமைப்பு, இஸ்டார் சிறப்பு விமானங்கள் போன்றவற்றை வாங்க இந்தியா விரும்புகிறது.