
இந்திய நாட்டின் நீண்ட கால கனவான சொந்தமாக ஐந்தாம் தலைமுறை போர்விமானங்களை வடிவமைத்து உருவாக்குவது விரைவில் நனவாகும் என தெரிகிறது.
தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி ஆம்கா போர் விமானத்தின் டிசைன் ஃப்ரீஸ் செய்யப்பட்டு உள்ளது, அதாவது இறுதி செய்யப்பட்டு உள்ளது.
இனி அடுத்த கட்டமாக உடல்பகுதி கட்டமைக்கப்பட்டு கருவிகள் இணைக்கப்பட்டு அடுத்தகட்ட பணிகள் நடைபெறும்.
மேலும் திட்டமிட்டபடியே 2025ஆம் ஆண்டுக்கு முன்னரே ஆம்கா பறக்கும் நிலையை எட்டி விடும் என்பது தெளிவாகிறது இது நிச்சயமாக ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.