ஆகாஷ் ப்ரைம் ஏவுகணையின் சோதனை வெற்றி மற்றொரு மைல்கல் !!

  • Tamil Defense
  • September 28, 2021
  • Comments Off on ஆகாஷ் ப்ரைம் ஏவுகணையின் சோதனை வெற்றி மற்றொரு மைல்கல் !!

நேற்று இந்தியா மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணையை ஒரிசா மாநிலத்தில் உள்ள சண்டிபூர் தளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

சோதனையின் போது எதிரி விமானத்தை போல வானில் பறந்த ஆளில்லா விமானத்தை சென்று வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

முந்தைய ஆகாஷ் ஏவுகணையை விட இந்த புதிய ஏவுகணையில் உள்நாட்டு சீக்கர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது, மேலும் பல உள்நாட்டு தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

அதிக உயரமான தாழ்வழுத்த பகுதிகளிலும் இந்த ஏவுகணை திறம்பட இயங்கி இலக்கினை விடாமல் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் விஞ்ஞானிகளை வாழ்த்தினர்.