காபூல் ட்ரோன் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்படவில்லை பொதுமக்கள் தான் கொல்லப்பட்டனர் பெண்டகன் ஒப்புதல் !!

  • Tamil Defense
  • September 18, 2021
  • Comments Off on காபூல் ட்ரோன் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்படவில்லை பொதுமக்கள் தான் கொல்லப்பட்டனர் பெண்டகன் ஒப்புதல் !!

காபூல் மீட்பு பணிகளின் போது விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிக கொடுரமான குண்டுவெடிப்பு தாக்குதல்களை நிகழ்த்தினர், இதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா ட்ரோன் மூலமாக பதில் தாக்குதல் நடத்தியது இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு கூறிவந்த நிலையில்,

தற்போது அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் நடத்திய துறைசார் ஆய்வில் ஒரு பயங்கரவாதி கூட கொல்லப்படவில்லை எனவும் இறந்து போன 10 பேரும் அப்பாவி ஆஃப்கன் மக்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அமெரிக்க மத்திய கட்டளையக தளபதி ஜெனரல் ஃப்ராங்க் மெக்கன்ஸி மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் ஆகியோர் இதனை ஒப்பு கொண்ட நிலையில்,

இறந்து போனவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மன்னிப்பும் கோரியுள்ளனர், மேலும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் சில நாட்கள் முன்பு வரை அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகை நிர்வாகம்,
அமெரிக்க கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் மார்க் மைலி, பெண்டகள் ஊடக செயலாளர் ஜாண் கிர்பி என அனைவரும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்த தாக்குதல்களை நியாயபடுத்தி பேசியது குறிப்பிடத்தக்கது.