600 தாலிபன்களை வீழ்த்திய எதிர்ப்பு படை போராளிகள்

  • Tamil Defense
  • September 5, 2021
  • Comments Off on 600 தாலிபன்களை வீழ்த்திய எதிர்ப்பு படை போராளிகள்

ஆப்கனின் பாஞ்சீர் பள்ளத்தாக்கு பகுதியில் தாலிபன்களுக்கும் நார்தர்ன் அலையன்ஸ் போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 600 தாலிபன்கள் வரை வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அங்கு சண்டை தொடர்ந்து நடைபெற்று வந்ததை தொடர்ந்து இதற்கு முன் கென்ஞ் மற்றும் அனாபா ஆகிய மாவட்டங்களை தாலிபன்கள் வசம் வந்துள்ளதாக தாலிபன்களின் செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி கூறியிருந்தார.

பாஞ்சீல் பள்ளத்தாக்கு பகுதியில் ஆழ ஊடுருவி குறைந்தது நான்கு மாவட்டங்களை தாலிபன்கள் கைப்பற்றியதாக இதற்கு முன் தகவல்கள் வெளியானது.