Day: September 30, 2021

ஜார்கண்ட்டில் நக்சல் தாக்குதல் மூத்த பாதுகாப்பு படை அதிகாரி வீரமரணம் !!

September 30, 2021

எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த துணை கமாண்டன்ட் ராஜெஷ் குமார் ஆவார் இவரை சிறிது காலம் ஜார்கண்ட் மாநில நக்சல் ஒழிப்பு படையில் பணியாற்ற உத்தரவு பிறபிக்கப்பட்டது. இதனையடுத்து ஜார்கண்ட் மாநில நக்சல் ஒழிப்பு படையான ஜாகுவாரில் பணியாற்றி வந்த அவர் நக்சல்களுடன் ஏற்பட்ட மோதல் ஒன்றில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலமாக அனுப்பி வைத்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் தனது […]

Read More

இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் ஆஃப்கன் படையினருக்கு விசா நீட்டித்து உத்தரவு !!

September 30, 2021

இந்தியாவின் பல்வேறு ராணுவ மையங்களில் 180 ஆஃப்கன் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால் எதிர்காலம் கேள்விக்குறி ஆன நிலையில் மத்திய அரசு சுமார் 6 மாத காலம் விசாவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்களது எதிர்காலம் குறித்து உறுதியான முடிவினை எடுக்க போதிய கால அவகாசம் கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. இவர்களில் 140 பேர் கனடா மற்றும் ஐரோப்பா செல்ல பல்வேறு […]

Read More

விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் மிக்29கே போர் விமான சிமுலேட்டர் இயங்க தொடங்கியது !!

September 30, 2021

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் ஐ.என்.எஸ். தேகா கடற்படை தளம் அமைந்துள்ளது இது இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையகத்தின் தலைமையகம் ஆகும். இந்த தளத்தில் மிக்29கே போர் விமானத்தின் சிமுலேட்டர் கிழக்கு கட்டளையக தளபதி வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிமுலேட்டர் உதவியுடன் கடற்படை போர் விமானிகள் மிக எளிதாக பயிற்சி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது நமது கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்களின் நடவடிக்கைகளுக்கு மேலும் பன்மடங்கு […]

Read More

பாகிஸ்தான் உதவியுடன் தாலிபான்கள் அணு ஆயுதத்தை பெறலாம் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !!

September 30, 2021

டோனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியவர் ஜாண் போல்டன் ஆவார். இவர் அமெரிக்க அரசின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆஃப்கானிஸ்தான் நாட்டின் வீழ்ச்சி மற்றும் தாலிபான்களின் எழுச்சிக்கு சரியாக திட்டமிடப்படாத படை விலக்கலே காரணம் எனவும், இந்த தாலிபான்கள் பாகிஸ்தான் நாட்டின் உதவியுடன் அணு ஆயுதத்தை பெறும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார். ஆக்கஸ் ஒப்பந்தத்தை […]

Read More

அமெரிக்க ட்ரோன்கள் ஆஃப்கன் வான்பரப்பில் பறக்கக்கூடாது கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் தாலிபான்கள் எச்சரிக்கை !!

September 30, 2021

அமெரிக்க ஆளில்லா விமானங்கள் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் வான்பரப்பில் பறக்கக்கூடாது என தாலிபான்கள் கூறியுள்ளனர். மேலும் அதை மீறி பறந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்காவுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கா தோஹா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச விதிகள் என அனைத்தையும் மீறி தன் போக்கில் செயல்படுவதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர். இதற்கு அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலடியும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஏன் ஃபிரான்ஸ் இந்தியாவின் விருப்பமிக்க பங்காளியாக திகழ்கிறது ஒரு பார்வை !!

September 30, 2021

சமீபத்தைய ஆக்கஸ் முத்தரப்பு ஒப்பந்தம் ஃபிரான்ஸுக்கு மிகப்பெரிய உள்ளைச்சலை ஏற்படுத்தி உள்ளது இதன் காரணமாக இந்தியாவுடன் கடற்படை அணு உலை திட்டத்தில் கைகோர்க்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியா ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 12 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளை வாங்க விரும்பிய நிலையில் அவற்றின் விலை 40 பில்லியன் டாலரில் இருந்து 65 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது இது அமெரிக்க மற்றும் பிரட்டிஷ் அணுசக்தி நீர்மூழ்கிகளின் மதிப்பை விட அதிகமாகும். மேலும் அந்த 12 […]

Read More

பிரங்கி படை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு இரண்டு பெரும் தடைகள் !!

September 30, 2021

கார்கில் போருக்கு பிறகான காலகட்டத்தில் இந்திய தரைப்படையின் பிரங்கி படைப்பிரிவு சுமார் 3000 முதல் 3700 பல்வேறு வகையான பிரங்கிகளை படையில் இணைக்க மாபெரும் திட்டம் ஒன்றை வகுத்தது. இந்த திட்டத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏடாக்ஸ் மற்றும் தனுஷ் ஆகிய பிரங்கிகள் முக்கிய இடமா பிடித்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டுமே மிகப்பெரிய தடைகளாக மாறி உள்ளன, காரணம் ஏடாக்ஸ் அனைத்து தர சோதனைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. தனுஷ் பிரங்கியோ தயாரிப்பு தரத்தில் பல்வேறு குளறுபடிகளை கொண்டுள்ளது, ஆனால் […]

Read More

DRDO மற்றும் OFB உடன் இணைந்து புதிய பிரங்கிகளுக்காக பணியாற்றும் தரைப்படை !!

September 30, 2021

தனுஷ் மற்றும் ஏடாக்ஸ் பிரங்கிகளை விரைவில் படையில் இணைக்க வேண்டி DRDO மற்றும் OFB ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஆர்ட்டில்லரி இயக்குனர் லெஃப்டினன்ட் ஜெனரல் சாவ்லா தெரிவித்தார். தரைப்படையின் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனுஷ் மற்றும் ஏடாக்ஸ் பிரங்கிகளை வாங்க பிரங்கி படை விரும்புகிறது. இரண்டிலும் உள்ள குளறுபடிகளை களைந்து விரைவில் படையில் இணைக்கும் வண்ணம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் ஆகியவற்றுடன் கைகோர்த்து […]

Read More