Day: September 27, 2021

சீனா முதலில் அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டோம் எனும் கொள்கையை கைவிட வேண்டும் சீன தூதர் பேச்சு !!

September 27, 2021

ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் முன்னாள் தூதர் ஷா சூகாங் சமீபத்தில் சீனா முதலில் அணு அயுதம் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை கைவிட வேண்டும் என கூறியுள்ளார். அதாவது அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் தொடர்ச்சியாக கூட்டணி அமைத்து வரும் நேரத்தில் சீனா தனது கொளைகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பேசியுள்ளார். அவர் மறைமுகமாக க்வாட் கூட்டமைப்பு மற்றும் சமீபத்தில் உருவான ஆக்கஸ் முத்தரப்பு கூட்டணியை மனதில் வைத்தே பேசியுள்ளார் என்பது தெள்ள தெளிவாகிறது.

Read More

அருணாச்சல பிரதேசத்தில் பயன்படுத்தி கொள்ள 2 டோர்னியர் விமானங்களுக்கு ஒப்பந்தம் !!

September 27, 2021

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அல்லயான்ஸ் ஏர் நிறுவனத்திற்கு இரண்டு டோர்னியர்228 ரக விமானங்களை விற்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் மலை பிரதேச மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் விமான போக்குவரத்து பலனடையும் இதன் வாயிலாக சுற்றுலா துறை வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானங்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன என்பது கூடுதல் தகவல் ஆகும்.

Read More

இந்திய கடற்படை தளபதி ஒமானுக்கு மூன்று நாள் சுற்றுபயணம் !!

September 27, 2021

நேற்று இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் ஒமான் நாட்டிற்கு மூன்று நாள் சுற்றுபயணமாக சென்றுள்ளார். அங்கு தனது ஒமான் சகாவான ரியர் அட்மிரல் சயீஃப் பின் நாசர் பின் மொஹ்சென் அல் ராஹ்பி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார். மேலும் அவர் ஒமான் ராணுவத்தின் தலைமை தளபதி வைஸ் அட்மிரல் அப்துல்லா காமிஸ் அப்துல்லாஹ் அல் ரைஸி, தரைப்படை தளபதி மேஜர் ஜெனரல் மத்தார் பின் சலீம் பின் ரஷீத் அல் […]

Read More

டோக்லாம் கல்வான் சம்பவங்கள் இந்தியாவின் மதிப்பை சர்வதேச அரங்கில் உயர்த்தியுள்ளது !!

September 27, 2021

இந்திய தரைப்படையின் துணை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சன்டி ப்ரசாத் மொஹந்தி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கல்வான் மற்றும் டோக்லாம் ஆகிய சம்வங்கள் நாட்டின் மதிப்பை மட்டுமின்றி ராணுவத்தின் மதிப்பையும் உலகளாவிய ரீதியில் உயர்த்தியுள்ளது என்றார். டோக்லாமிலும் கல்வானிலும் இந்திய வீரர்கள் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை தங்களது உயிரை கொடுத்து தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More

கல்யாணி குழுமத்தின் எங்கும் செல்லக்கூடிய புதிய சுதேசி கருடா-105 பிரங்கி !!

September 27, 2021

இந்தியாவின் கல்யாணி குழுமம் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக பிரங்கி ஒன்றை வடிவமைத்துள்ளது. கருடா-105 என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரங்கி ஒரு 4×4 வாகனத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் இது 105மிமீ பிரங்கி ஆகும். 360 டிகிரி கோணத்தில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இதனை எந்த பகுதிக்கும் கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ள முடியும், எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி விட்டு உடனடியாக மற்றொரு இடத்திற்கு நகர்ந்து சென்று அங்கிருந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது குறிப்பாக […]

Read More

ப்ராஜெக்ட் வேதா பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியாவின் மர்ம ஏவுகணை திட்டம் !!

September 27, 2021

சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி அவரது அலுவலகத்தில் இருந்து அளித்த பேட்டியில் ஒரு மர்ம ஏவுகணை தென்பட்டது. அவரது அலுவலகத்தில் இருந்து அந்த ஏவுகணை மாதிரி இதுவரை எங்கும் தென்படாத கேள்விபடாத முற்றிலும் புதிய ஏவுகணையாக இருந்தது இதற்கு வேதா என்ற பெயரும் இருந்தது. சிலரின் கருத்துப்படி இது புதிய வகை செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் சிலர் இது 5000 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு […]

Read More

இந்திய கடற்படைக்கு எத்தனை அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் தேவை !!

September 27, 2021

சமீபத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை பெறுவதற்காக ஆக்கஸ் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. அதன்படி பிரிட்டிஷ் அஸ்டியூட் ரக கப்பலின் டிசைனை வைத்து 8 கப்பல்களை ஆஸ்திரேலியா பெறும், இதனால் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுடனான நீர்மூழ்கி ஒப்பந்தத்தை நம்பி பல ஒப்பந்தங்களை நழுவ விட்ட ஃபிரான்ஸ் கடும் ஏமாற்றமடைந்தது. தற்போது இதிலிருந்து விடுபட அந்த இழப்பை சரிகட்ட ஃபிரான்ஸ் இந்தியாவுடன் இணைந்து செயல்படலாம் அப்படி நடந்தால் ஃபிரான்ஸூக்கு சில வாய்ப்புகள் உள்ளன.அவையாவன, அணுசக்தி […]

Read More

மியான்மரில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் க்வாட் அமைப்பு !!

September 27, 2021

மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சி குறித்து க்வாட் உறுப்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன அதன்படி அங்கு ஜனநாயகம் திரும்ப வேண்டுமென வலியுறுத்தி உள்ளன. இதுகுறித்து கூட்டாக பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் மியான்மரில் ஆசியான் அமைப்பின் ஐந்து குறிப்பு தீர்மானம் அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அவர்கள் அங்கு நடைபெற்று வரும் வன்முறை முடிவுக்கு வர வேண்டும் எனவும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் […]

Read More