Day: September 25, 2021

விண்வெளி துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா விருப்பம் !!

September 25, 2021

முக்கிய ஆஸ்திரேலிய அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலிய விண்வெளி முகமையின் மூத்த விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா விரும்புவதாக தெரிவித்தனர். ஆஸ்திரேலியா 2030ஆம் ஆண்டுவாக்கில் தனது விண்வெளி பொருளாதாரத்தை மூன்று மடங்காக அதிகரிக்க விரும்புகிறது, மேலும் இந்தியா விண் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க உள்ளது. இரு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி முகமைகளின் மூத்த விஞ்ஞானிகள் இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு சந்திப்பில் கலந்து கொண்டு ஆஸ்திரேலியா இந்தியா விண்வெளி இகோஸ்பேஸை அமைப்பது தொடர்பாக பேசினர். […]

Read More

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் இடைய பேச்சுவார்த்தை; பாக் பயங்கரவாதம் முக்கிய இடம்பிடித்தது !!

September 25, 2021

க்வாட் தலைவர்கள் மாநாட்டுக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி இருவரும் பேசிக்கொண்ட நிலையில் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையேயான தொடர்புகள் குறித்தும் பேசினர். வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்க்லா இதுகுறித்து பேசும் போது பிரதமர் மோடி எல்லை தாண்டிய பாக் பயங்கரவாதம் குறித்து விவாதித்ததாகவும், அதற்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் நல்ல முறையில் பதில் அளித்தாகவும் பயங்கரவாதம் […]

Read More

இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் சூகா க்வாட் சந்திப்புக்கு இடையே பேச்சுவார்த்தை !!

September 25, 2021

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வரும் க்வாட் தலைவர்கள் சந்திப்புக்கு இடையே இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் சூகா ஆகியோர் சந்தித்து பேசினர். இருதரப்பும் உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகளை அதிகப்படுத்துவது குறித்தும் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களும் மும்பை அஹமதாபாத் இடையேயான அதிவேக ரயில்வே பாதை திட்டம் தொடர்பாகவும் பேசியுள்ளனர், இத்திட்டம் இருதரப்பு உறவுகளின் அடையாளம் எனவும் கூறினர்

Read More

தாலிபான் தலைவர்கள் மற்றும் இம்ரான் கான் இடையே மோதல் பேச்சு !!

September 25, 2021

கடந்த புதன்கிழமை அன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான் ஆஃப்கானிஸ்தான் பொம்மை அரசு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என கூறினார். இந்த பேச்சு தாலிபான்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் தாலிபான் செய்தி தொடர்பாளர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது பாகிஸ்தான் ராணுவத்தின் பொம்மையாக தான் இம்ரான் கானும் அவரது நிர்வாகமும் உள்ளது, அந்நாட்டு மக்களில் பெரும்பாண்மையானோர் அவர்கள் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர் எனவும், பாகிஸ்தான் பிற நாடுகளின் […]

Read More

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் இம்ரான் பேச்சுக்கு இந்தியா பதிலடி !!

September 25, 2021

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது, இதில் ஆன்லைன் முலமாக கலந்து கொண்டு பேசிய பாக் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசினார். இதற்கு கடும் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய பிரதிநிதியான ஸ்நேகா தூபே பேசும் போது பாகிஸ்தான் தலைவர்களுக்கு சர்வதேச அரங்கில் பொய்களை பேசுவது புதிதல்ல எனவும், உலகளாவிய ரீதியாக பாகிஸ்தான் பயங்கரவாத நாடு அது தொடரந்து பயங்கரவாதிகளை பயிற்றுவித்து ஆயுதமளித்து வன்முறையை தூண்டி […]

Read More

தொலைதூர வான் இலக்கு ஏவுகணை ருத்ரம்-3 அடுத்த ஆண்டு சோதனை !!

September 25, 2021

கடந்த ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் ருத்ரம்-3 ஏவுகணையை சுகோய்30 விமானத்தில் இணைத்து சோதனை செய்வதற்கான டென்டர் ஒன்றினை வெளியிட்டது. தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி ருத்ரம்-3 ஏவுகணையை சுகோய்30 விமானத்தில் இணைப்பதற்கான பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் சோதனை கட்டத்தை நோக்கி நகரந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு ருத்ரம்-3 ஏவுகணையின் சோதனைகள் நடைபெறலாம் எனவும் இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 20 லிமிடெட் சீரீஸ் ஏவுகணைகளை தயாரித்து வருவதாகவும் தகவல்கள் […]

Read More

காஷ்மீர் மற்றொரு ஆஃப்கானிஸ்தானாக மாறாமல் காப்பது இந்திய ராணுவம் தான்; பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் பேச்சு !!

September 25, 2021

பிரிட்டன் பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினரான டெப்பி ஆப்ரஹாம்ஸ் மற்றும் பாகிஸ்தானை பூர்வமாக கொண்ட உறுப்பினர் யாஸ்மின் குரேஷி ஆகியோர் காஷ்மீரில் மனித உரிமைகள் பற்றி பேச தீர்மானம் ஒற்றை முன்மொழிந்தனர். அப்போது அதில் பங்கேற்று பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பாப் ப்ளாக்மேன் ஆஃப்கனில் படை விலக்கத்துக்கு பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம், இந்திய ராணுவம் தான் காஷ்மீர் மற்றொரு ஆஃப்கானிஸ்தானாக மாறாமல் தடுத்து காபாற்றி வருவதாக தெரிவித்தார். இந்தியா தனது படைகளை விலக்கி கொண்டால் […]

Read More