ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தாலிபான் தலைவர்களுக்கு ஆதரவாக சீனா தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்தது. அதன்படி சுமார் 180 நாட்களுக்கு தாலிபான்களின் தலைவர்கள் வெளிநாட்டு பயணம் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பது சீன விருப்பமாகும். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைவராக தற்போது இந்தியா உள்ள நிலையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு அந்த தீர்மானத்தை முடக்கியுள்ளது. மேலும் ஆஃப்கானிஸ்தான் மண்ணை தாலிபான்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவோ அல்லது பயிற்சி அளிக்கவோ […]
Read Moreஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் தாலிபான்கள் உறவு முக்கிய இடம் பிடிக்கும் எர தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு துவங்கி 45 நிமிடங்கள் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தலைவர் தாலிபான்களுடன் ஆஃப்கனில் இருந்தது. பாகிஸ்தான் தீவிர ஆதரவு அளித்து வரும் ஹக்கானி குழுவின் சிராஜூதீன் ஹக்கானி ஆஃப்கானிஸ்தான் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது […]
Read Moreஎல்லையோர சாலைகள் நிறுவனம் இந்தியாவின் எல்லைகளில் புதிய சாலைகள் பாலங்கள் சுரங்கங்கள் அமைப்பது பின்னர் அவற்றை பராமரிப்பது போன்ற படிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும். தற்போது இந்த அமைப்பில் நான்கு பெண்கள் சாலை கட்டுமான கம்பனிகளை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது, இவை பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் இயங்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் பிபால்கோட்டி பகுதியை தளமாக கொண்டு இயங்கி வரும் 75ஆவது சாலை கட்டுமான கம்பனியின் கட்டளை அதிகாரியாக மேஜர் அய்னா […]
Read Moreநேற்று இந்திய தரைப்படை சுமார் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மார்க்-1ஏ டாங்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சுமார் 118 அர்ஜ் மார்க்-1ஏ டாங்கிகள் சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையால் தயாரிக்கப்படும் என்பதும் இவற்றின் மதிப்பு சுமார் 7523 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டாங்கிகள் ஏற்கனவே தரைப்படையில் சேவையில் இருக்கும் 124 அர்ஜூன் மார்க்-1 டாங்கிகளை விடவும் அதிநவீனமானவை என கூறப்படுகிறது. அதாவது சுமார் 72 வகையான மேம்பாடுகள் செய்யப்பட்டது […]
Read Moreசுமார் 22,000 கோடி ருபாய் மதிப்பில் இந்திய விமானப்படையின் அரத பழைய ஆவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக 56 சி295 விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று அதற்கான ஒப்பந்தத்தில் ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கையெழுத்து இட்டுள்ளது. 56 விமானங்களில் 16 விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்தால் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு 4 வருடங்களுக்குள் பறக்கும் நிலையில் டெலிவரி செய்யப்படும். மீதமுள்ள 40 விமானங்களும் டாடா அட்வான்ஸ்டு […]
Read Moreசமீபத்தில் வெளியான தகவல்களின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டார் பகுதியில் ஐந்து தாலிபான் பயங்கரவாதிகள் புகுந்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு நமது பாதுகாப்பு படையினர் மிக பெரிய அதி தீவிரமான தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் உரி ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read Moreஅடுத்த ஆண்டு அல்லது அதற்கு முன்னரே இந்தியாவின் கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கான மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமானப்படைக்கு அடுத்த கட்டமாக 36 எஃப்4 ரக ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் இவை தற்போது வாங்கப்பட்ட எஃப்3 ரக ரஃபேல விமானங்களை விட நவீனமானது எனவும் இறுதி செய்யப்பட்டால் 2026ஆம் ஆண்டு டெலிவரி துவங்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்திய விமானப்படை கூடுதலாக 6 சி130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் […]
Read Moreஅக்னி-5 ஏவுகணையின் சோதனை நடத்தப்பட உள்ளதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது, ஆனால் இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் முனைவர் சதீஷ் ரெட்டி மறுத்துள்ளார். மேலும் அவர் பேசும் போது அடுத்த 20-30 நாட்களில் அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை என கூறினார். அக்னி-5 ஏவுகணை 50 டன் கொண்டது, இந்த ஏவுகணை சுமார் 1500 கிலோ எடை கொண்ட அணு ஆயுதம் அல்லது வழக்கமான வெடிகுண்டை சுமந்து […]
Read More