Day: September 23, 2021

மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய பாதுகாப்பு படை வீரர்கள்

September 23, 2021

காஷ்மீரின் உரி அருகே ராம்பூர் செக்டாரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் போட்டுத் தள்ளியுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் சில நாட்களுக்கு முன்பு இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர்.போட்டுத் தள்ளிய பயங்கரவாதிகளிடம் இருந்து ஐந்து AK-47 துப்பாக்கிகள், எட்டு பிஸ்டல்கள் மற்றும் 70 கிரேனேடுகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். இது தவிர பாகிஸ்தான் நாட்டு ரூபாய்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர இன்று பந்திபோராவின் ஹாஜின் பகுதியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளும் […]

Read More

சீன விமானங்களை வாங்க போவதில்லை; அர்ஜென்டினா மறுப்பு !!

September 23, 2021

சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 விமானத்தை அர்ஜென்டினா தனது விமானப்படைக்காக வாங்க போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அர்ஜென்டினா அரசு அதிகாரப்பூர்வமாக நாங்கள் இதுவரை எந்த ஒரு போர் விமானத்தையும் தேர்வு செய்யவில்லை என அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதே நேரத்தில் சீனாவே இதுவரை இந்த விமானத்தை படையில் சேர்க்கவில்லை ஆனால் மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினா தனது […]

Read More

பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து இரு விமானிகள் மரணம் !!

September 23, 2021

பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் வழக்கமான பயிற்சியின் போது மர்தான் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சிக்கி விமானத்தில் இரண்டு விமானிகளும் இறந்துவிட்டதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதமும் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான மற்றொரு போர் பயிற்சி விமானம் அட்டோக் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது ஆனால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஆக்கஸ் ஒப்பந்த பிரச்சினைக்கு இடையே இந்திய பிரதமர் ஃபிரெஞ்சு அதிபர் பேச்சுவார்த்தை !!

September 23, 2021

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஃபிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடல் நடத்தியுள்ளார். இருவரும் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பது குறித்தும் பேசி கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

Read More

இந்தியா துருக்கிக்கு மறைமுக எச்சரிக்கை !!

September 23, 2021

நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகான் பேசியது பலத்த சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்தியா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் சைபர்ஸ் வெளியுறவு அமைச்சரான நிகோஸ் கிறிஸ டோடூலிடெஸை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசியுள்ளார். கடந்த காலத்திலும் துருக்கி இது போன்ற செயல்களில் ஈடுபட்ட போது இந்தியா அர்மீனியா மற்றும் க்ரீஸ் ஆகிய நாடுகளுடன் நெருக்கம் காட்டி உள்ளது. மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளுமே துருக்கியுடன் மோசமான […]

Read More

காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் !!

September 23, 2021

துருக்கி அதிபர் எர்டோகான் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டோடு காஷ்மீர் குறித்து பேசியுள்ளார். அதாவது 74 வருடங்களாக தொடர்ந்து நீடிக்கும் காஷ்மீர் பிரச்சினையில் காஷ்மீருக்கு ஆதரவளிக்கிறோம் என பேசியுள்ளார். இதற்கு இந்தியா துருக்கி அடுத்த நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் துருக்கி அதிபர் எர்டோகான் ரோஹிங்கியா மற்றும் உய்குர் இஸ்லாமிய மக்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் […]

Read More

2023ஆம் ஆண்டு சோதனையில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை !!

September 23, 2021

பிரம்மாஸ் அடுத்த தலைமுறை ஏவுகணையானது 2023ஆம் ஆண்டு சோதனை செய்யப்படும் எனவும் அது உலகின் மிக வேகமான வானிலிருந்து ஏவப்படும் க்ருஸ் ஏவுகணையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகளை பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் துவங்கி உள்ளதாகவும் லக்னோவில் தனது புதிய தொழிற்சாலைக்கு இடம் தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நமது சொந்த தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தில் தான் முதலில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை பொருத்தப்படும் எனவும், தேஜாஸ் மார்க்-1ஏ விமானத்தின் பிரதான கப்பல் […]

Read More