Breaking News

Day: September 21, 2021

சற்று முன் காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து விமானிகள் காயம் !!

September 21, 2021

ஜம்மு பிராந்தியத்தின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பானிடாப் பகுதியில் ஷிவ்கர் வனப்பகுதியில் நாக் தேவ்தா கோயிலுக்கு அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகளும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, காவல்துறை மற்றும் ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலதிக தகவல்கள் வரும்வரை எந்தவித பாதிப்பு பற்றியும் தெரியாத நிலை தற்போது உள்ளது.

Read More

குஜராத்தில் கைப்பற்றப்பட்ட 21,000 கோடி மதிப்புள்ள ஆஃப்கன் போதை பொருள்; சென்னை தம்பதிகள் கைது !!

September 21, 2021

குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இதுவரை இல்லாத அளவில் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பர் 13 ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் வழியாக இந்தியா அனுப்பி வைக்கப்பட்ட டால்க் பவுடருடன் இந்த ஹெராயின் இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று இதனை இறக்குமதி செய்துள்ளது, மேலும் இதில் தொடர்புடைய சென்னை தம்பதி மற்றும் தில்லியில் வசிக்கும் சில ஆஃப்கனியர்களும் கைது செய்யப்பட்டு […]

Read More

மன்னார் வளைகுடா பகுதியில் 2 டன் கடல் வெள்ளரிகளை கைப்பற்றிய கடலோர காவல்படை !!

September 21, 2021

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே அமைந்துள்ள இந்திய கடலோர காவல்படை தளத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மன்னார் வளைகுடா பகுதியில் சோதனை நடைபெற்றது. அதாவது ஒரு படகில் கடல் வெள்ளரிகள் கடத்தப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது, இதனையடுத்து ஹோவர்க்ராஃப்ட் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றது. அப்போது தெற்கு வடலை பகுதியில் இருந்து கடலில் 15 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்த படகில் கடலோர காவல்படையினர் சோதனை நடத்தினர். அந்த படகில் […]

Read More

இந்தியா நம்பத்தகுந்த நட்பு நாடு அல்ல – அனாஸ் ஹக்கானி !!

September 21, 2021

வியான் செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்த ஹக்கானி குழுவின் இளம் தலைவர்களில் ஒருவனனான அனாஸ் ஹக்கானி பேசும்போது, இந்தியா ஆஃப்கானிஸ்தானுக்கு என்றுமே நட்பு நாடு அல்ல எனவும் இந்தியாவை நம்ப முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் கடந்த 20 வருடங்களாக இந்தியா ஆஃப்கனில் சண்டையை மூட்டி விடுவதாகவும் அமைதிக்காக எதுவுமே செய்ததில்லை எனவும் கூறியுள்ளார். இந்தியா தாலிபான்களை மிக மோசமாக சித்தரிப்பதாகவும் இந்தியா எப்போதுமே நெகட்டிவ் ரோலை செய்து வருவதாகவும் பேசியுள்ளார்.

Read More

காபூலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தில்லியில் கைது செய்யப்பட்டவன் – ஐ.எஸ் கொரஸான் !!

September 21, 2021

ஐ.எஸ். கொரஸான் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆஃப்கன் தலைநகர் காபூலில் கடந்த மாதம் தங்களது இயக்கம் சார்பில், அப்தூர் ரஹ்மான் லோகாரி என்பவன் தற்கொலை படை தாக்குதலை நடத்தியதாகவும் அவன் ஐந்து வருடங்கள் முன்பு இந்திய தலைநகர் தில்லியில் கைது செய்யப்பட்டு ஆஃப்கனுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முடிவு செய்து இந்தியா வந்து கைதாகிய அவன் பின்னர் பல வருடங்களாக காத்திருந்து கடந்த மாதம் தனது லட்சியத்தை அடைந்ததாக அந்த […]

Read More