Breaking News

Day: September 18, 2021

இந்திய பிரம்மாஸ் ஏவுகணையை போல் காட்சியளிக்கும்தென்கொரிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணை !!

September 18, 2021

சமீபத்தில் தென்கொரியா ஒரு சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணையை தயாரிக்க உள்ளதாக அறிவித்து மாதிரி படத்தை வெளியிட்டது. இந்த படத்தில் அந்த ஏவுகணையை பார்ப்பதற்கு இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பு சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணையான பிரம்மாஸை போல உள்ளது. திட எரிபொருள் மோட்டார் மற்றும் திரவ எரிபொருள் ராம்ஜெட் என்ஜினை கொண்டதாகவும் இடைமறிக்க கடினமானதாகவும் அதிக வேகத்துடன் பறக்க கூடியது எனவும் கூறப்படுகிறது. இவை அனைத்துமே தென் கொரிய விஞ்ஞானிகள் பிரம்மாஸ் ஏவுகணையை பற்றி விரிவாக ஆராய்ந்து இருக்கலாம் […]

Read More

காபூல் ட்ரோன் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்படவில்லை பொதுமக்கள் தான் கொல்லப்பட்டனர் பெண்டகன் ஒப்புதல் !!

September 18, 2021

காபூல் மீட்பு பணிகளின் போது விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிக கொடுரமான குண்டுவெடிப்பு தாக்குதல்களை நிகழ்த்தினர், இதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா ட்ரோன் மூலமாக பதில் தாக்குதல் நடத்தியது இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு கூறிவந்த நிலையில், தற்போது அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் நடத்திய துறைசார் ஆய்வில் ஒரு பயங்கரவாதி கூட கொல்லப்படவில்லை எனவும் இறந்து போன 10 பேரும் அப்பாவி ஆஃப்கன் மக்கள் […]

Read More

ஆஸ்திரேலிய ஆக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கி ஒப்பந்தம்; ஃபிரான்சுக்கு கல்தா கொடுத்த நட்பு நாடுகள் !!

September 18, 2021

ஆஸ்திரேலியா மிக நீண்ட காலமாக தனது கடற்படையை வலுப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகளை நீண்ட கால நோக்கில் எடுத்து வருகிறது. அந்த வகையில் தனது கடற்படைக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வாங்க முடிவு செய்த நிலையில் ஃபிரான்ஸ் நாட்டின் நேவல் க்ருப் உடன் ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் ஃபிரான்சுக்கு ஒப்பந்தத்தை வழங்காமல் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை கூட்டாக இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த உள்ளன. சுமார் 90 பில்லியன் டாலர்கள் மதிப்பில் […]

Read More