Day: September 7, 2021

இந்த வருடத்தில் நான்கு கப்பல்கள் அடுத்தடுத்து படையில் இணைப்பு !!

September 7, 2021

இந்திய இந்த வருட இறுதிக்குள்ளாக அடுத்தடுத்து நான்கு போர்க்கப்பல்களை படையில் இணைக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல்களில் முதலாவதான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களில் நான்காவதான ஐ.என்.எஸ் வேலா, பின்னர் செப்டம்பர் மாத இறுதிக்குள்ளாக ஏவுகணை கண்காணிப்பு கப்பலான ஐ.என்.எஸ். த்ருவ், கடைசியாக ஏவுகணை சோதனை கப்பலான ஐ.என்.எஸ். அவினாஷ் ஆகியவை படையில் இணைய உள்ளன. மேலும் ஐ.என்.எஸ் விக்ராந்தின் சோதனை ஒட்டத்துடன் இந்த […]

Read More

இந்தியாவின் முதல் ஏவுகணை சோதனை கப்பல் விரைவில் சோதனை !!

September 7, 2021

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே கட்டியமைத்த ஏவுகணை சோதனை கப்பலான ஐ.என்.எஸ். அன்வேஷ் விரைவில் சோதனை ஓட்டம் செல்ல உள்ளது. இந்த ஏவுகணை சோதனை கப்பல் மூலமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏவுகணை சோதனைகளை விரைவாக நடத்தி முடிக்கலாம். குறிப்பாக இடைமறிப்பு ஏவுகணைகளை சோதிக்க முடியும், இந்த கப்பல் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் படையில் இணைக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும். உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே இத்தகைய அதிநவீன கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன, […]

Read More

இந்திய தயாரிப்பு வானூர்திகள் மீது ஆர்வம் காட்டும் ஃபிலிப்பைன்ஸ் !!

September 7, 2021

ஃபிலிப்பைன்ஸ் நாட்டு கடலோர காவல்படை நாம் சொந்தமாக தயாரித்த த்ருவ் வானூர்திகள் மீது ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களின்படி சுமார் 7 த்ருவ் வானூர்திகள் வரை ஃபிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை வாங்கலாம் என கூறப்படுகிறது. மேலும் நாம் சொந்தமாக தயாரித்து இயக்கி வரும் 8 டோர்னியர்-222 ரக விமானங்களையும் வாங்க ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ராஜஸ்தானில் விமான ஒடுதள தரத்தில் புதியசாலை விரைவில் திறப்பு !!

September 7, 2021

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் விமான ஒடுதள தரத்திலான புதிய நெடுஞ்சாலை விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று இந்த சாலையில் தரையிறங்கி தரத்தினை உறுதி செய்யும். அந்த விமானத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் பயணிக்க உள்ளனர். ஏற்கனவே ஆக்ராவில் இத்தகைய சாலை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது ராஜஸ்தானில் இது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரண்டு […]

Read More