Day: September 6, 2021

விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை வெடிகுண்டு மூலம் தகர்க்க போவதாக மிரட்டல் !!

September 6, 2021

இன்று கொச்சி கப்பல் கட்டுமான தளத்திற்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை வெடிகுண்டு மூலம் தகர்க்க போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கப்பல் கட்டுமான தள அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் கொச்சி நகர காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதை தீவிர புகாரின் தன்மையை கருத்தில் கொண்டு மத்திய புலனாய்வு அமைப்புகளும் தங்களது நடவடிக்கைகளை முடக்கி விட்டுள்ளனர். நாட்டிலேயே முதல்முறையாக கட்டபட்ட விமானந்தாங்கி கப்பலான விக்ராந்தை […]

Read More

பாஞ்ச்ஷீர் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை ட்ரோன்கள் குண்டுவீச்சு !!

September 6, 2021

ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களுக்கு எதிரான கடைசி கோட்டையாக இருந்து வரும் பாஞ்ச்ஷீர் பள்ளதாக்கு பகுதி மீது தாலிபான்கள் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் விமானப்படையின் ஆளில்லா விமானங்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் சமாங்கன் பாராளுமன்ற உறுப்பினரான ஜியா அரியன்ஜாத் இந்த குண்டுவீச்சில் அதிநவீன ஸ்மார்ட் குண்டுகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். பல முக்கிய தாலிபான் எதிர்ப்பு தலைவர்கள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Read More

அதிநவீன அஸ்திரா ஏவுகணை சுகோய் உடன் இணைப்பு !!

September 6, 2021

இந்திய விமானப்படையின் சுகோய் 30 ரக போர் விமானத்தில் அதிநவீன அஸ்திரா ஏவுகணையின் புதிய வடிவம் இணைக்கப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் நரேந்திர குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ARMY-2021 FORUM நிகழ்ச்சியில் இந்த ஏவுகணை காட்சிபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசும் போது நமது சொந்த தயாரிப்பில் உருவான பல வகை தளவாடங்களை இந்த நிகழ்ச்சியில் காட்சிபடுத்தியதாகவும் அவர் தகவல் தெரிவித்தார். அந்த வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் […]

Read More

ரெட் அலர்ட்; காஷ்மீரில் அதிகமாக ஊடுருவும் வெளிநாட்டு பயங்கரவாதிகள்

September 6, 2021

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா ,குப்வாரா,பந்திபோரா போன்ற மாவட்டங்களில் உள்நாட்டு பயங்கரவாதிகளை விட வெளிநாட்டு பயங்கரவாதிகள் அதிக அளவு ஊடுருவியுள்ளனர்.இது நமது பாதுகாப்பு படைகளுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதன் மூலமாக அதிக தாக்குதல் நடக்கலாம் என்ற எண்ணத்தில் காவல் துறையினர் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் நடமாட்டங்களை குறைத்துள்ளனர். வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்நாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 11 ஆக இருக்கும் போது வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 40-50ஆக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளின் தெற்கு காஷ்மீரை விட […]

Read More