Day: September 2, 2021

ஜென் டெக்னாலஜி நிறுவனத்திடம் இருந்து ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு வாங்க முடிவு

September 2, 2021

Zen Technologies நிறுவனத்திடம் இருந்து சுமார் 120 கோடிகள் செலவில் பாதுகாப்பு படைகளுக்கு ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆர்டர் ஒரு வருடத்திற்குள்ளாக முடிக்கப்படும் எனவும் ஒப்பந்தத்தின் இரகசியம் கருதி ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என Zen Tech நிறுவனம் கூறியுள்ளது. இது தவிர பாதுகாப்பு படைகள் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை ஆர்டர் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படை டிஆர்டிஓ தயாரிப்பு கடற்சார் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை ஆர்டர் […]

Read More

ஆப்கன் பிரச்சனை எதிரொலி; ஆயுத கடத்தலை தடுக்க நடவடிக்கை

September 2, 2021

ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் தற்போது நடக்கும் பிரச்சனையை அடுத்து இந்தியா அட்டாரி எல்லையில் முதல் Radiation Detection Equipment (RDE) ஐ நிறுவியுள்ளது.இந்த ரேடியேசனை கண்டறியும் கருவி மூலம் ஆயுத கடத்தலை கண்டறிந்து தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி full-body truck scanner என அழைக்கப்படும்.அடிப்படையில் இது ஒரு எக்ஸ் ரே அமைப்பு போல தான். ட்ரக் போன்றவற்றில் ஆயுதம்,வெடிபொருள் மற்றும் மற்ற சட்டவிரோத பொருள்கள் இருந்தால் இந்த அமைப்பு ஸ்கேன் செய்து தெரிவிக்கும்.தவிர ரேடியாக்டிவ் […]

Read More

பஞ்சீர் பகுதியில் தொடரும் சண்டை;41 தாலிபன்கள் உயிரிழப்பு

September 2, 2021

ஆப்கனின் பாஞ்சீர் பள்ளத்தாக்கு பகுதியில் தாலிபன்களுக்கு எதிராக சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தற்போது நடைபெற்ற சண்டையில் 41 தாலிபன்கள் நார்தர்ன் அலையன்ஸ் படையால் வீழ்த்தப்பட்டுள்ளனர் மேலும் 20 பேரை கைதிகளாக பிடித்துள்ளனர். பள்ளத்தாக்கு பகுதிக்குள் காவாக் எனும் பகுதி வழியாக தாலிபன்கள் நுழைய முற்பட்டதை அடுத்து இந்த சண்டை நடைபெற்றுள்ளது.இது தவிர ஆன்டரப் பகுதிக்குள் தாலிபன்கள் நுழைய முற்பட்டதை அடுத்து அங்கும் நடந்த சண்டையில் 34 தாலிபன்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர். நாங்கள் உங்களை பள்ளத்தாக்கு பகுதிக்குள் நுழைய அனுமதிப்போம் […]

Read More

பயங்கர ஆயுதங்களை விட்டுச்சென்ற அமெரிக்கா; இந்தியா கவலை

September 2, 2021

ஆகஸ்டு 31 அன்று மொத்த அமெரிக்க நேச நாட்டு படைகளும் ஆப்கனை விட்டு சென்றுவிட்டன.அத்துடன் அவர்கள் 80 பில்லியன் டாலர்கள் பெருமானம் உள்ள ஆயுதங்களையும் விட்டுச்சென்றுள்ளனர். அமெரிக்கா ஆப்கன் படைகளுக்கு 2003 முதல் 16,000 இரவில் பார்க்கும் கருவிகள், M16 துப்பாக்கிகள் உட்பட 600,000 இன்பான்ட்ரி ஆயுதங்கள் மற்றும் 162,000 தொடர்பு சாதனங்கள் வழங்கியுள்ளன. இவை அனைத்தும் தற்போது பயங்கரவாதிகள் வசம் உள்ளன.மற்றும் ஆளில்லா விமானங்களை தற்கொலை ட்ரோன்களாக தாலிபன்கள் உபயோகிக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். […]

Read More