மூன்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை கைது செய்த தாலிபன் பயங்கரவாதிகள்

  • Tamil Defense
  • August 27, 2021
  • Comments Off on மூன்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை கைது செய்த தாலிபன் பயங்கரவாதிகள்

காபூல் விமான நிலையத்தை நோக்கி வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்திருப்பதாக தாலிபன்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.காபூல் விமான நிலையத்தில் புதிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக இவர்கள் வந்ததாக தாலிபன்கள் கூறியுள்ளனர்.

இதற்கு முன் காபூல் விமானநிலையத் தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்த தாலிபன்கள் இந்த வெடிப்பிற்கு அமெரிக்க தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலுக்கு முன்பே அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை தாங்கள் எச்சரித்ததாக தாலிபன்களின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த தாக்குலுக்கு காரணமானவர்களை கண்டிப்பாக கண்டறிந்து வீழ்த்துவோம் என அமெரிக்க அதிபர் பிடன் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.