மூன்று கோப்ரா கமாண்டோ வீரர்களுக்கு சௌரிய சக்ரா விரு

  • Tamil Defense
  • August 15, 2021
  • Comments Off on மூன்று கோப்ரா கமாண்டோ வீரர்களுக்கு சௌரிய சக்ரா விரு

மத்திய ரிசர்வ் காவல் படையின் சிறப்பு பிரிவான கோப்ரா கமாண்டோ படைப் பிரிவை சேர்ந்த மூன்று வீரர்களுக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.சத்திஸ்கரன் சுக்மா மாவட்டத்தில் நான்கு மிக முக்கிய நக்சல்களை வீழ்த்தியமைக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருது தான் சௌரிய சக்ரா ஆகும்.201வது கோப்ரா பட்டாலியனைச் சேர்ந்த டெபுடி கமாண்டன்ட் சிதேஷ் குமார், சப் இன்ஸ்பெக்டர் மன்ஜிந்தர் சிங் மற்றும் கான்ஸ்டபிள் சுனில் சௌதாரி ஆகிய வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சத்திஸ்கரின் சுக்மாவில் மார்ச் 26,2019 அன்று இந்த ஆபரேசன் நடைபெற்றுள்ளது.இதில் எட்டு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நான்கு நக்சல்களை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.மேலும் அவர்களிடமிருந்து இன்சாஸ் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் இந்த ஆபரேசனின் போது நக்சல்களின் உடல்களையும் வீரர்கள் கைப்பற்றினர்.பெரும்பாலும் நக்சல்கள் இறந்தால் அவர்கள் உடல்கள் கிடைப்பது அரிது தான்.

இந்த ஆபரேசனில் வீரத்துடன் போரிட்ட மூன்று வீரர்களுக்கும் சௌரிய சக்ரா வழங்கப்பட்டுள்ளது.