2023ல் புதிய பிரைகேட்ட் கப்பல்களை டெலிவரி செய்யும் இரஷ்யா
முதல் இரு மேலதிக கிரிவாக் ரக ஸ்டீல்த் பிரைகேட் கப்பல்கள் 2023 மத்தியில் இந்திய கடற்படைக்கு இரஷ்யா டெலிவரி செய்யும் என இரஷ்யாவின் கப்பல்கட்டும் தளமான United Shipbuilding Corporation (USC) கூறியுள்ளது.
கொரானா காரணமாக தான் கட்டுமானத்தின் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்படதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.இதன் காரணமாக எட்டு மாத தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2016ல் இந்தியா மற்றும் இரஷ்யா நான்கு கிரிவக் ரக கப்பல்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இந்த நான்கில் இரண்டு இரஷ்யாவிலும் இரண்டு இந்தியாவிலும் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதில் இரஷ்யாவின் யந்தர் தளத்தில் கட்டப்பட்டு வந்த இரு கப்பல்களும் தற்போது கட்டுமானம் முடியும் தருவாயில் உள்ளது.இந்தியாவில் கட்டப்பட்டு வரும் கப்பல் 2026 வாக்கில் டெலிவரி செய்யப்படும்.
தற்போது இந்திய கடற்படையில் ஆறு கிரிவக் அல்லது தல்வார ரக பிரைகேட் கப்பல்கள் செயல்பாட்டில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.