72 மணி நேரத்தில் ஐந்து மாகாண தலைநகர்களை கைப்பற்றிய தாலிபன்கள்; ஆப்கன் படைகள் தாங்குமா ?

  • Tamil Defense
  • August 10, 2021
  • Comments Off on 72 மணி நேரத்தில் ஐந்து மாகாண தலைநகர்களை கைப்பற்றிய தாலிபன்கள்; ஆப்கன் படைகள் தாங்குமா ?

72 மணி நேர அதிவேக தாக்குதலுக்கு பிறகு தாலிபன்கள் ஆப்கனின் ஐந்து மாகாண தலைநகர்களை கைப்பற்றியதை அடுத்து தற்போது ஆப்கன் படைகள் தாலிபன்களுக்கு எதிராக தெற்கு ஆப்கனில் போரிட்டு வருகின்றன.

கந்தகார் மற்றும் ஹெல்மன்ட் மாகாண பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற சண்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தாலிபன்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.ஆப்கன் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில் , தாலிபன்கள் கடுமையான சேதத்திற்கு உட்பட்டுள்ளனர் எனவும் ஆப்கனில் பாதுகாப்பு நிலை மேம்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

முக்கிய நகரங்களில் ஆப்கன் பாதுகாப்பு படைகள் ரோந்து சென்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.ஆப்கனில் இருந்து அமெரிக்க நேச நாட்டு படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தாலிபன்கள் மிக கடுமையான தாக்குதல்களை நடத்தி நாட்டை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

தற்போது கந்தகார் மற்றும் லஷ்கர்ஹ பகுதிகளை பிடிக்க தாலிபன்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.