பழிவாங்கும் படலத்தை துவங்கிய தாலிபான்கள் வீடு வீடாக சோதனை பதறும் ஆஃப்கனியர்கள் !!

  • Tamil Defense
  • August 16, 2021
  • Comments Off on பழிவாங்கும் படலத்தை துவங்கிய தாலிபான்கள் வீடு வீடாக சோதனை பதறும் ஆஃப்கனியர்கள் !!

தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானை கைபற்றியதை அடுத்து தங்களது பழிவாங்கும் படலத்தை துவங்கி உள்ளனர், இதனால் ஆஃப்கன் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தலைநகர் காபூலில் வீடு வீடாக சென்று பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், நேட்டோ பணியில் இருந்தவர்களை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே நாட்டின் பல்வேறு இடங்களில் பலரை ஆள் அரவமற்ற பகுதிகளுக்கு கடத்தி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து நாடுகளும் வெளியேறியதும் தாலிபான்களின் அட்டுழியம் கட்டவிழ்த்து விடப்படும் என சர்வதேச பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.