
காபூலை கைப்பற்றிய பிறகு தாலிபன்கள் காஷ்மீரை பற்றிய தங்கள் நிலை குறித்து தெரிவித்துள்ளனர்.காஷ்மீர் விவகாரம் இருநாடுகளுக்கு இடையேயான உள்நாட்டு பிரச்சனை அவர்கள் கூறியுள்ளனர்.
காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் தலையிடமாட்டோம் எனவும் தாலிபன்கள் கூறியுள்ளனர்.தற்போது காஷ்மீரில் அதிகரித்துள்ள பயங்கரவாதிகள் குறித்து பேசிய அதிகாரி ஒருவர் போரினால் குழப்பத்தில் உள்ள ஆப்கன் மண்ணை பாக்கை சேர்ந்த பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஆப்கன் இராணுவத்தினரின் அனைத்து நவீன ஆயுதங்களும் தற்போது தாலிபன்கள் வசம் உள்ளன.பாக்கை சேர்ந்த பயங்கரவாத குழுக்களான லஷ்கர் இ தொய்பா மற்றும் லஷ்கர் இ ஜாங்வி ஆகிய இயக்கங்கள ஆப்கனிலும் வியாபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களுக்கு ஆப்கனில் முகாம்களும் இதற்கு முன் இருந்துள்ளபடியால் இந்தியா கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.மேலும் பாக்கிஸ்தான் தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்ற உதவியுள்ளதாக கூறப்படுகிறது.