
கந்தகார் மற்றும் ஹெரத் மாகாணங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் தாலிபன்கள் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.கப்போர்டுகளில் ஏதேனும் முக்கிய தடயங்கள் கிடைக்குமா என தேடிய பிறகு அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எடுத்து சென்றுள்ளனர்.ஜலலபாத் மற்றும் காபூல் தூதரகங்கள் குறித்த தகவல்கள் ஏதும் தற்போது வெளியாகவில்லை.
கந்தகார் தூதரக கதவுகளை உடைத்த தாலிபன்கள் அங்கு தடயங்கள் குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.அதன் பிறகு அங்கு நிறுத்தப்பட்டிருந்த அதிகாரிகளின் வாகனங்களை எடுத்து சென்றுள்ளனர்.அதே போல ஹெரத் தூதரக சுவர்களில் ஏறி குதித்து அங்கிருந்த வாகனங்களை திருடிச் சென்றுள்ளனர்.