காபூல் விமான நிலையத்தை கைப்பற்றிய தாலிபன்கள் ??

  • Tamil Defense
  • August 29, 2021
  • Comments Off on காபூல் விமான நிலையத்தை கைப்பற்றிய தாலிபன்கள் ??

நிறைய ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து கொண்டிருந்த வேளையில் தற்போது காபூல் விமான நிலையம் தாலிபன்கள் வசம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் நேசநாட்டு படைகள் மீட்பு பணியை முடிக்கும் நேரத்தில் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.தனது சொந்த நாட்டு மக்கள் மற்றும் இத்தனை ஆண்டு காலமாக இந்த நாடுகளுக்கு உதவிய உள்ளூர் ஆப்கானியர்களையும் மீட்காமல் பாதியிலேயே மீட்பு பணிகள் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நேச நாட்டு படைகள் பெரும்பாலும் தங்களது மீட்பு நடவடிக்கையை முடித்துள்ள நிலையில் அமெரிக்கா மட்டும் இறுதி நாள் வரை விமானத்தை இயக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

113500 பேர் இது வரை மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.மேலும் அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என அதிபர் பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் அமெரிக்கர்கள் விமான நிலையம் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.