எங்களிடம் கூறாமல் தாக்குவதா? அமெரிக்காவிற்கு தாலிபன்கள் கண்டனம்

  • Tamil Defense
  • August 29, 2021
  • Comments Off on எங்களிடம் கூறாமல் தாக்குவதா? அமெரிக்காவிற்கு தாலிபன்கள் கண்டனம்

ஆப்கனில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலமாக தாக்குதல் நடத்துவதற்கு முன்பு தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தற்போது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தனது கண்டனத்தையும் தாலிபன்கள் பதிவு செய்துள்ளனர்.

காபூல் தாக்குதலுக்கு பலிதீர்க்கும் நடவடிக்கையாக அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஐஎஸ்ஐஎஸ் கொரசான் இயக்கத் திட்டமிட்டவனை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.இதில் இரண்டு பேர் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது.

இதற்கு தாலிபன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.நாங்கள் முழுமையான வெளியேறும் வரை எங்களால் எங்களை பாதுகாக்க முடியும் என அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்கா முழுமையாக வெளியேறிய பின்னர் காபூல் விமான நிலையத்தை தனது கட்டப்பாட்டில் எடுத்த பின்பு தாலிபன்கள் அங்கு ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தவிர அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் மேற்கு நாடுகளுடன் இராஜாங்க உறவை ஏற்படுத்த தாங்கள் விரும்புவதாக தாலிபன்கள் கூறியுள்ளனர்.