
தாலிபன்கள் நாளுக்கு நாள் ஆப்கனில் மேலதிக நிலப்பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக இந்தியா ஆப்கனுக்கு பரிசாக வழங்கிய தாக்கும் வானூர்தி ஒன்றை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வானூர்திக்கு அருகே தாலிபன்கள் நிற்கும் புகைப்படம் மற்றும் கானொளிகள் தற்போது அதிகமாக பரவி வருகின்றன.ஆனால் அந்த வானூர்தியின் ரோட்டார் பிளேடுகள் நீக்கப்பட்டுள்ளன.தாலிபன்கள் அதை உபயோகிக்க முடியாத வண்ணம் அந்த பிளேடுகளை ஆப்கன் படைகள் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ல் ஆப்கன் படைகளுக்கு இந்த வானூர்தியை இந்தியா பரிசாக அளித்தது.இது தவிர மூன்று சீட்டா இலகுரக வானூர்திகளும் பரிசாக வழங்கப்பட்டன.தற்போது வரை தாலிபன்கள் 65 முதல் 70 சதவீத ஆப்கனை கைப்பற்றியுள்ளனர்.