பெண் ஆளுநரை கடத்திய தாலிபான்கள் !!

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் சாக்ரின்ட் மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் சலிமா மஸாரி இவர் தாலிபான்களை தீவிரமாக எதிர்த்து வந்தார்.

தாலிபான்களுக்கு எதிரான சண்டையிலும் அளப்பரிய பங்காற்றிய இவர் மீது கடுங்கோபம் கொண்டிருந்த தாலிபான்கள்,

தற்போது நாடு தங்களது வசம் வந்தததை அடுத்து அவரை கடத்தி உள்ளனர், எங்கு கொண்டு சென்றனர் என எவ்வித தகவலும் இல்லை.

அவருக்கு என்ன நேருமோ என அவரது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.