
காபூலில் உள்ள விமான நிலையத்தை நோக்கி சராமாரியாக ராக்கெட்டுகள் வீசப்படுவதாகவும் ஆனால் அவற்றை விமான நிலையத்தில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காபூலுக்கு அருகே உள்ள ஒரு வாகனத்தில் இருந்து இந்த ராக்கெட்டுகள் விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளன.நேற்று அமெரிக்கா ஒரு வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் அழித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
விமான நிலையத்தில் எந்த இலக்கை நோக்கி இந்த வாகனங்கள் வீசப்பட்டன என்பவை குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.