மூன்று மாவட்டங்களை கைப்பற்றிய தாலிபன் எதிர்ப்பு படை வீரர்கள்

  • Tamil Defense
  • August 21, 2021
  • Comments Off on மூன்று மாவட்டங்களை கைப்பற்றிய தாலிபன் எதிர்ப்பு படை வீரர்கள்

கைர் முகமது ஆன்டராபி என்பவர் தலைமையிலான பப்ளிக் ரெசிஸ்டன்ஸ் என்ற தாலிபன் எதிர்ப்பு படைப் பிரிவு
போல்-இ-கெசர், தெ சலா மற்றும் பானு ஆகிய மாவட்டங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக நடைபெற்ற சண்டையில் 60 தாலிபன்கள் வீழ்த்தப்பட்டதாக அல்லது காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.பொது மன்னிப்பு என தாலிபன்கள் கூறியது போல நடந்து கொள்ளவில்லை என கூறிய அப்படையினர் மேலதிக மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த மாவட்டங்கள் பாஞ்சீர் பகுதிக்கு மிக அருகே உள்ளன.மேலும் பாஞ்சீர் ஒரு சக்திமிக்க தாலிபன் எதிர்ப்பு பகுதியாக உள்ளது.அங்கு நார்தர்ன் அலையன்ஸ் எனும் பெயரில் தாலிபன் எதிர்ப்பு படை ஒன்று உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.