
பாகிஸ்தான் தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கியழிக்க கூடிய கஸ்நாவி பலிஸ்டிக் ஏவுகணையை பயிற்சி நோக்கத்திற்காக ஏவி பரிசோதனை செய்துள்ளது.பாக்கின் Strategic Forces Command-ன் ஆபரேசன் தயார் நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சியை பாகிஸ்தான் நடத்தியுள்ளது.
மேலும் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த சோதனை பாக்கின் ஸ்ட்ரேட்டஜிக் படையின் கமாண்டர் லெப் ஜென் முகமது அலி பார்வையில் நடத்தப்பட்டுள்ளது.தவிர பாக் இராணுவத்தின் முக்கிய தளபதிகள் அனைவரும் இந்த சோதனையின் போது கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு பாக் பிரதமர் இம்ரான் கான் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.