பாக் மற்றும் ஆப்கனுக்கு இடையே உள்ள உறவு குறித்து பேசிய தாலிபன்களின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் பாக் தங்களின் இரண்டாவது வீடு எனப் பேசியுள்ளார்.
மேலும் இரு நாடுகள் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன மற்றும் இரு நாடுகளும் ஒரே மதத்தை பின்பற்றுகின்றன.வரும் காலத்தில் இரு நாடுகளும் உறவுகளை ஆழமாக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் காஷ்மீரை பற்றிய பேசிய அவர் இரு நாடுகளும் காஷ்மீர் பற்றி பேசி முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஆப்கனில் இஸ்லாமை அடிப்படையாக கொண்ட நிலையான அரசு அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.