தரமில்லாத நீர்மூழ்கி மற்றும் சீனா ,துருக்கியிடமிருந்து நீர்மூழ்கிகள் டெலிவரி செய்ய ஏற்பட்டுள்ள கால தாமதம் முதலிய காரணங்களால் பாக் கடற்படையில் வெறும் இரு நீர்மூழ்கிகளே செயல்பாட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செயல்பாட்டில் உள்ள நீர்மூழ்கிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாரு மற்றும் அவற்றை அப்கிரேடு செய்யும் பணிகளில தாமதம் காரணமாக இரண்டு நீர்மூழ்கிகள் மட்டுமே தற்போது பாக் கடற்படையில் செயல்பாட்டில் உள்ளன.
பாக் கடற்படையில் இருந்த ஐந்து அகோஸ்டா வகை நீர்மூழ்கிகளில் மூன்று நீர்மூழ்கிகள் அப்கிரேடு மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்பாட்டில் இல்லை.மீதமுள்ள அகோஸ்டா 90B மற்றும் அகோஸ்டா 70 நீர்மூழ்கிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.இவையும் அடுத்த வருட நடுப்பகுதி வரை மட்டுமே தாக்குபிடிக்கும் என கூறப்படுகிறது.
அதே பாக் கடற்படையின் முக்கிய போர்க்கப்பல்களிலும் பிரச்சனைகள் தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பிஎன்எஸ் கைபர் கப்பலில் கடந்த ஏப்ரல் முதலே பிரச்சனைகள் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.சீனா வடிவமைத்து கட்டப்பட்ட பிஎன்எஸ் சைப் மற்றும் பிஎன்எஸ் சுல்பிகர் கப்பல்களில் சீனத் தயாரிப்பு FM-90 பாதுகாப்பு ஏவுகணைகள் சரிவர இயங்கவில்லை என கூறப்படுகிறது.மேலும் சுல்பிகர் கப்பலில் உள்ள ரேடாரிலும் பிரச்சனை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.