இந்திய இராணுவத்திற்கு மேட் இன் இந்தியா கிரேனேடுகள்

இந்தியாவில் முதல் முறையாக தனியார் நிறுவனம் கிரேனேடுகள் தயாரித்து இந்திய இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.இதனை ஒட்டி நடந்த விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் முதல் தொகுதி கிரேனேடுகளை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த Multi-Mode Hand Grenade களை நாக்பூரில் உள்ள Economic Explosive Ltd நிறுவனம் டிஆர்டிஓ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.முதல் தொகுதி ஒரு லட்சம் கிரேனேடுகள் தரச் சோதனை செய்யப்பட்டு தற்போது இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2020ல் இந்திய இராணுவத்திற்கு பத்து லட்சம் கிரேனேடுகள் வழங்க EEL நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.முதல் உலகப்போர் காலத்து வடிவமைப்பு கொண்ட கிரேனேடுகளுக்கு மாற்றாக இந்த குண்டுகள் தற்போது இராணுவத்தில் இணைகிறது.

பழயை கிரேனேடுகளை விட இவை பாதுகாப்பானவை…