தாலிபன்களுக்கு எதிரான முதல் எதிர்ப்பு படை

  • Tamil Defense
  • August 18, 2021
  • Comments Off on தாலிபன்களுக்கு எதிரான முதல் எதிர்ப்பு படை

தாலிபன்கள் ஆப்கனை முழுவதும் கைப்பற்றிய பிறகு மறைந்த ஆப்கன் அரசியல்வாதி அகமது ஷா மசூத் அவர்களின் மகன் அகமது மசூச் தலைமையில் புதிய தாலிபன் எதிர்ப்பு படை பாஞ்சீர் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது.நார்தர்ன் அலயன்ஸ் எனப்படும் அந்த படையின் கொடி பாஞ்சீர் பகுதியில் 2001க்கு பிறகு தற்போது மறுபடியும் பறக்கவிடப்பட்டுள்ளது.

தற்போது அகமது மசூச் அவர்கள் போராட அழைக்க மறைந்துள்ள ஆப்கன் வீரர்கள் பாஞ்சீர் பகுதிக்கு சென்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆப்கனின் சுதந்திர போராட்டத்தில் இணைய தற்போது அகமது மசூச் அழைப்பு விடுத்துள்ளார்.

தாலிபன்கள் தற்போது ஆப்கனை கைப்பற்றிய பிறகு அங்கு குழப்பம் தொடர்ந்து வருகிறது.தாலிபன்கள் மக்களை பணிகளுக்கு திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.