இந்திய இராணுவத்திற்கு புதிய த்ருவ் வானூர்திகள் வாங்க முடிவு

  • Tamil Defense
  • August 31, 2021
  • Comments Off on இந்திய இராணுவத்திற்கு புதிய த்ருவ் வானூர்திகள் வாங்க முடிவு

இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் இந்திய இராணுவத்திற்கு சுமார் 14000 கோடிகள் செலவில் 25 த்ருவ் வானூர்திகள் மற்றும் ஆகாஸ்-எஸ் வான் பாதுகாப்பு அமைப்புகள் வாங்கப்பட உள்ளன.

இந்திய இராணுவம் தற்போது 141 த்ருவ் வானூர்திகள் இயக்கி வருகிறது.இந்த புதிய 25 வானூர்திகளை தவிர்த்து ஏற்கனவே 63 வானூர்திகள் ஆர்டரில் உள்ளன.பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமையில் விரைவில் நடைபெற உள்ள சந்திப்பில் இந்த புதிய தளவாடங்கள் வாங்க அனுமதி வழங்கப்படும்.

இந்த புதிய ரக Akash-S ஏவுகணைகள் உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட சீக்கர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மேலும் இவற்றின் துல்லியத்தன்மையும் அதிகம் ஆகும்.25-30கிமீ வரை சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.

மலைப் பிரதேசம் மற்றும் பனிப்பிரதேசம் என எந்த பகுதியிலும் இந்த ஏவுகணை அமைப்பு சிறப்பாக செயல்பட வல்லது ஆகும்.இந்த ஏவுகணை அமைப்பு ஏற்கனவே படைகளில் இணைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அமைப்பை புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு செழுமைப்படுத்தி வருகிறது நமது டிஆர்டிஓ.