ஆப்கனில் நேட்டோ படைகளின் இருபது வருடங்கள்
1 min read

ஆப்கனில் நேட்டோ படைகளின் இருபது வருடங்கள்

ஆப்கனில் அமெரிக்க நேச நாட்டு படைகள் 20 வருடங்களாக தாலிபன்களை எதிர்த்து போரிட்டனர்.இதற்கு முன் ஆப்கனை கைப்பற்றி ஆட்சி செய்த தாலிபன்களை விரட்டி அங்கு நேசப்படைகள் தாலிபன்களை எதிர்த்து 20 வருடங்கள் போரிட்டனர்.

இந்த இருபது வருடங்களில் 51000க்கும் மேற்பட்ட தாலிபன்கள் வீழ்த்தப்பட்டனர்.70000க்கும் மேற்பட்ட ஆப்கன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர 3500க்கும் மேற்பட்ட நேட்டோ படையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.இத்தனை உயிர்தியாகங்களையும் தாண்டி தற்போது ஆப்கன் மீண்டும் தாலிபன்கள் வசம் சென்றுள்ளது.

இவ்வளவு சீக்கிரம் ஆப்கன் தாலிபன்கள் வசம் வீழ்ந்திருக்கும் என யாரும் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்…ஒருபக்கம் ஆப்கன் படைகள் எதிர்த்து போராடவில்லை என ஒருசாரர் கூறுகின்றனர்.மறுபக்கம் ஆப்கன் வீரர்கள் எங்களை அரசியல் வாதிகள் தான் பின்வாங்கச் செய்தனர் என கூறுகின்றனர்.

எதுஎப்படியோ நேசநாட்டு படைகளின் 20 வருட போர் வீண் தான்.அவர்களின் தியாகம் வீணாக போயுள்ளது.அவர்கள் செய்த செலவு வீண்..ஆப்கன் இராணுவத்தை கட்டமைக்க அவர்கள் பட்ட பாடும் வீண்.

தற்போது ஆப்கன் மீண்டும் காலத்தில் பின்னோக்கி செல்வதாக தோன்றுகிறது.