ஆப்கன் இராணுவத்திற்கு செய்த செலவு…இப்போது தாலிபன்களுக்கு பயன்
1 min read

ஆப்கன் இராணுவத்திற்கு செய்த செலவு…இப்போது தாலிபன்களுக்கு பயன்

20 வருடங்களாக 83 பில்லியன்கள் டாலர் செலவு செய்து ஆப்கன் இராணுவத்தை கட்டமைத்து வளர்த்தும் ஆப்கன் இராணுவம் வெறும் கொஞ்ச காலத்துக்குள்ளாகவே தாலிபன்களிடம் வீழ்ந்துள்ளது.ஆப்கன் இராணுவத்திற்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் ,வானூர்திகள் மற்றும் வெடிபொருள்கள் அனைத்தும் தற்போது தாலிபன்கள் வசம் சிக்கியுள்ளது.

மாகாண தலைநகர்களை ஆப்கன் படைகள் காக்காமல் பின்வாங்கிய பிறகு அதிநவீன ஆயுதங்கள் தாலிபன்கள் வசம் சிக்கியுள்ளது.தாக்கும் விமானங்கள் உள்ளிட்டு தற்போது தாலிபன்கள் வசம் சிக்கியுள்ளது.சில நேரங்களில் ஆப்கன் படைகள் போராடமலேயே தாலிபன்களிடம் ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களை கொடுத்து சரணடைந்துள்ளனர்.

அதிநவீன ஆயுதங்களை கொடுத்தும் ஏன் ஆப்கன் படைகள் வீழ்ந்தன என்பதை இனி இராணுவ ஆராய்ச்சியாளர்கள் காலம் முழுதும் படிக்க உள்ளனர்.ஆப்கன் படையினருக்கு சண்டையிடும் ஊக்கத்தை அமெரிக்க படைகள் கொடுக்கவில்லையோ என தோன்றுகிறது…!