
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் குவாம் கடற்பகுதியில் குவாட் நாடுகள் வரும் ஆகஸ்டு 26 முதல் 29 வரை மலபார் போர்பயிற்சியில் ஈடுபட உள்ளன.
அமெரிக்காவின் மேற்கு கடற்பகுதியில் உள்ள தீவு தான் குவாம்.இந்த பயிற்சியில் கலந்து கொள் இந்திய கடற்படையின் ஸ்டீல்த் பிரைகேட் ஐஎன்எஸ் ஷிவாலிக் மற்றும் கார்வெட் கப்பல் ஐஎன்எஸ் கட்மட் ஆகியவை குவாம் சென்றுள்ளன.
மற்ற நாடுகளின் டெஸ்ட்ராயர்கள், பிரைகேட்டுகள்,கார்வெட் கப்பல்கள், நீர்மூழ்கிகள் , வானூர்திகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் ஆகியவை இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளன. காம்ப்ளெக்ஸ் சர்ஃபேஸ், சப் சர்ஃபேஸ், சுடும் பயிற்சி, நீர்மூழ்கி எதிர்ப்பு,வான் பாதுகாப்பு ஆகியவை குறித்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.