
மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் இந்திய கடற்படைக்கு Rs 1,349.95 கோடி ரூபாய் செலவில் Integrated Anti-Submarine Warfare Defence Suite (IADS)வழங்கும் ஆர்டரை பெற்றுள்ளது.
திறந்த வெளி டென்டர் முறை பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பிறகு இந்த ஆர்டரை பெற இந்திய நிறுவனங்கள் போட்டியிட்டன.இதில் மஹிந்திரா நிறுவனத்தின் அமைப்பு சோதனைகளுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டது.
இந்திய கடற்படை கப்பல்களுக்காக 14 IADS அமைப்புகளை மஹிந்திரா நிறுவனம் வழங்கும்.இந்த அமைப்பு நீரடி ஆபத்துகளில் இருந்து இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.மேலும் இதுபோன்ற நவீன அமைப்பை இந்திய கடற்படைக்காக ஒரு இந்திய நிறுவனம் தயாரிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த அமைப்பை அனைத்து – சிறிய,நடுத்தர மற்றும் பெரிய- போர்க்கப்பல்களிலும் பயன்படுத்த முடியும்.