இராணுவ வீரர்களுக்கு மேட் இன் இந்தியா குண்டுதுளைக்காத தலைக் கவசம்

  • Tamil Defense
  • August 29, 2021
  • Comments Off on இராணுவ வீரர்களுக்கு மேட் இன் இந்தியா குண்டுதுளைக்காத தலைக் கவசம்

ஏகே-47 குண்டுகள் கூட துளைக்காத புதிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தலைக்கவசங்கள் இந்திய இராணுவ வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளன.கான்பூரில் உள்ள MKU Ltd நிறுவனத்துடன் 158279 தலைக்கவசங்கள் பெற பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் இந்த வருட ஏப்ரலில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.தற்போது முக்கியமான ஆபரேசன் நடைபெறும் இடங்களில் பணிபுரியும் வீரர்களுக்கு இந்த தலைக்கவசங்கள் வழங்கப்பட்டுவிட்டது.மேலும் கடற்படை வீரர்களும் இந்த தலைக்கவசத்தை தற்போது உபயோகித்து வருகின்றனர்.

இந்த 1.58 லட்ச தலைக்கவசங்களில் 55000 தலைக்கவசங்களில் தொலைத்தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த தலைக்கவசங்கள் கமாண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இந்த தலைக்கவசங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு MKU நிறுவனத்தால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த தலைக்கவசங்கள் இராணுவத்தால் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த நிறுவனம் சிலி,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,எகிப்து மற்றும் நேபாள் ஆகிய நாடுகளுக்கு MKU நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த தலைக்கவசங்கள் இலகுஎடையுடையன ஆகும்.அளவை பொறுத்து 1.2 kg முதல் 1.4 kg அளவு எடை இருக்கும்.அதிர்வுகளை தாங்கி தலையில் ஏற்படும் காயத்தை தடுக்கும் அளவுக்கு இந்த தலைக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.தற்போது இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள பட்கா தலைக்கவசத்திற்கு மாற்றாக இந்த புதிய தலைக்கவசம் பயன்படுத்தப்படும்.1990கள் முதல் இந்த பட்கா கவசங்களை வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பட்கா தலை கவசத்துடன் வீரர்கள்