
கல்யாணி நிறுவனம் புதிய TC-20 எனப்படும் ட்ரக்கை அடிப்படையாக கொண்ட 155மிமீ/39 காலிபர் அதிஇலகுரக ஹொவிட்சர் ஒன்றை மேம்படுத்தியுள்ளது.இந்த புதிய ஆர்டில்லரி தற்போது சோதனைக்காக இராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆர்டில்லரி மலைப் பகுதிகளில் வைத்து செயல்படுத்த ஏற்ற தன்மை கொண்டது.
அடுத்த 12 மாதங்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கிந்திய பகுதிகளில் வெவ்வேறு காலநிலைகளில் வைத்து இந்த ஆர்டில்லரி கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.