ஆப்கனில் இருந்து நாடு திரும்பும் இந்திய தூதர்

  • Tamil Defense
  • August 17, 2021
  • Comments Off on ஆப்கனில் இருந்து நாடு திரும்பும் இந்திய தூதர்

ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்புவார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்தியா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

20 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றியதை அடுத்து அங்கு பெருங்குழப்பம் நீடித்து வருகிறது.அமெரிக்க படைகளை திரும்ப பெற்று கொள்வதாக அமெரிக்க அதிபர் பிடன் அறிவித்ததை அடுத்து தாலிபன்கள் மிக வேகமாக முன்னேறி ஆப்கனை கைப்பற்றியுள்ளனர்.

காபூலை கைப்பற்றிய பிறகு ஆப்கன் அதிபர் அஷ்ரப் நாட்டை விட்டு வெளியேற அரசுப்படைகளும் பின்வாங்கி விட்டன.தற்போது காபூல் விமான நிலையம் வழியாக அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் நேசநாட்டு படைகள் வெளியேறி வருகின்றனர்.

இந்தியா தனது இராணுவ விமானங்களை காபூலுக்கு அனுப்பி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது…மேலதிக செய்திகளுக்கு தொடர்ந்து நமது பக்கத்தில் இணைந்திருங்கள்..மற்றும் நமது செய்திகளை அதிகமாக பகிருங்கள் நண்பர்களே..