கடற்சோதனையில் இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பு விமானம் தாங்கி கப்பல்

  • Tamil Defense
  • August 4, 2021
  • Comments Off on கடற்சோதனையில் இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பு விமானம் தாங்கி கப்பல்

இந்தியாவிலேயே கட்டப்பட்ட பெரிய விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இன்று தனது முதல் கடற்சோதனையை மேற்கொண்டது.இந்த சம்பவத்தை இந்திய கடற்படை வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என வர்ணித்துள்ளது.

இந்த மூலம் ஒரு விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து கட்டும் திறன்பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.1971 போரில் ஆகச் சிறப்பாக செயல்பட்ட விக்ராந்தின் பெயரை தாங்கிய இந்த 40000 டன்கள் எடை கொண்ட கப்பல் கடற்சோதனையில் இன்று ஈடுபடுத்தப்பட்டது.

சுமார் 23000 கோடிகள் செலவில் இந்த கப்பல் கட்டப்பட்டு வருகிறது.மேலும் ஏவியேசன் சோதனைகள் முடிந்த பிறகு கப்பல் அடுத்த வருடம் படையில் இணைக்கப்பட்டும்.

இந்திய கப்பல் கட்டும் வரலாற்றிலேயே இது ஆகப்பெரிய சாதனை ஆகும்.ஒரு பெரிய கடினமான வடிவமைப்பு கொண்ட கப்பல் இந்தியாவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

கப்பல் 262மீ நீளமும் ,62மீ அகலமும் கொண்டது ஆகும்.இந்த கப்பலை கொச்சின் கப்பல் கட்டும் தளம் கட்டி வருகிறது.இந்த கப்பலில் இருந்து 30 விமானங்கள் மற்றும் வானூர்திகள் இணைக்க முடியும்.

மிக்-29கே மற்றும் காமோவ்-31 வானூர்திகள் இந்த கப்பலில் இருந்து இயக்கப்படும்.இந்தியாவிடம் தற்போது விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி கப்பல் மட்டுமே உள்ளது.