கடற்படைக்காக 18 தேஜஸ் விமானங்கள் வாங்க திட்டம்

  • Tamil Defense
  • August 19, 2021
  • Comments Off on கடற்படைக்காக 18 தேஜஸ் விமானங்கள் வாங்க திட்டம்

விமானம் தாங்கி கப்பலில் வைத்து இயக்க கூடிய தாக்கும் ஆற்றல் கொண்ட 18 தேஜஸ் பயிற்சி விமானங்களை கடற்படை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்ஓசி தரத்திலான தேஜஸ் Mk1பயிற்சி விமானங்களை இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.மிக்-29 போன்ற விமானங்களை விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயக்குவதற்கு முன் விமானிகளின் திறனை மேம்படுத்துவதற்காக இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடற்படை விமானிகள் பயிற்சி பெற ஏற்கனவே 2013ல் 17 Hawk 132 விமானங்கள் பெறப்பட்டன.அதாவது அடிப்படை பயிற்சி மற்றும் நவீன கடைசி பயிற்சிக்கு இடையே உள்ள இடத்தை நிரப்ப இந்த விமானங்கள் பெறப்பட்டன.ஆனால் இவற்றை Deck-based operationக்கு உபயோகிக்க இயலாது.

இதற்கு முன் ஏற்கனவே Tejas Navy Mk1 விக்ரமாதித்யாவில் இருந்து கடந்த 2019ல் சோதனை செய்யப்பட்டது.எனவே இந்த விமானத்தை நாம் விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து பயிற்சி பெற உபயோகிக்கலாம்.