குல்மார்கில் 100மீ உயரமுள்ள இந்தியக்கொடி நிறுவிய இந்திய இராணுவம்

  • Tamil Defense
  • August 11, 2021
  • Comments Off on குல்மார்கில் 100மீ உயரமுள்ள இந்தியக்கொடி நிறுவிய இந்திய இராணுவம்

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்ட உள்ள நிலையில் குல்மார்கில் 100மீ உயரமுள்ள இந்திய தேசியக் கொடி நிறுவப்பட்டு பறக்கவிடப்பட்டுள்ளது.வடக்கு கட்டளையக தளபதி லெப் ஜென் ஜோஷி அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தேசத்திற்காக வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகங்களை போற்றினார்.

காஷ்மீரில் அமைதி மற்றும் தேசப்பற்று அதிகரித்து வரும் இந்த புதிய யுகத்தை நினைவு கூறும் வகையில் இந்த கொடி பறக்கும் என இராணுவம் கூறியுள்ளது.

1965 போரில் இந்த பகுதியில் தான் பாக் படைகள் முதலில் நுழைந்தனர்.அப்போது அங்கிருந்த ஆடு மேய்க்கும் காஷ்மீர் இளைஞர் தான் இந்த தகவலை இராணுவத்திற்கு தெரிவித்துள்ளார்.இந்த தகவல் மூலம் இராணுவம் சுதாரித்து தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாக் வீழ்த்தியதாக இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.