
போபர்ஸ் ஆர்டில்லரியுடன் இந்திய இராணுவம் இந்திய சீன எல்லையில் பயிற்சி மேற்கொண்டுள்ளது. எல்லையில் சீனா தொடர்ந்து கட்டுமானங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய இராணுவத்தின் இந்த பயிற்சி அமைந்துள்ளது.
எல்லையின் இந்த பகுதியில் தற்போது பிரச்சனை ஏதும் இல்லை எனினும் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறது இந்திய இராணுவம்.இது எப்போதும் நடக்கிற பயிற்சி தான்.
போபர்ஸ் துப்பாக்கிகள் 30கிமீ அப்பால் குண்டு எறிய கூறியது.1980களின் இறுதியில் இந்த துப்பாக்கிகள் படையில் இணைக்கப்பட்டன.மேலும் கார்கில் போரில் இந்த துப்பாக்கிகளின் பணி அளப்பறியது.
12நொடியில் மூன்று ரவுண்டுகள் சுடும் திறன் பெற்றவை இவை.இதன் உதவியுடன் தான் கார்கில் போரில் மலைமீது இருந்த பாக் படைகளை தாக்கியது இராணுவம்.2001 ஆபரேசன் பரக்ரம் நடவடிக்கையின் போதும் எதிரி நிலைகள் மீது குண்டு மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.