சௌதி அரேபியக் கடற்படையுடன் முதல் முறையாக கூட்டுப்பயிற்சியில் இந்திய கடற்படை

  • Tamil Defense
  • August 12, 2021
  • Comments Off on சௌதி அரேபியக் கடற்படையுடன் முதல் முறையாக கூட்டுப்பயிற்சியில் இந்திய கடற்படை

சௌதி மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் உறவுகளை அடுத்து தற்போது முதல் முறையாக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொச்சி சௌதி கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Al-Mohed Al-Hindi 2021 என்ற பெயரில் இந்த பயிற்சி கடற்கரை மற்றும் கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது.இந்த பயற்சி கடந்த திங்கள் அன்று தொடங்கியது.

கொல்கத்தா ரக போர்க்கப்பல்களில் ஒன்று தான் ஐஎன்எஸ் கொச்சி ஆகும்.இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த கப்பல் தற்போது மேற்கு கடற் கட்டளையகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

அபுதாபி கடலோர பகுதியில் எமிரேட்ஸ் நாட்டுடன் பயிற்சியை முடித்து தற்போது சௌதி கடற்படையுடன் பயிற்சி மேற்கொண்டுள்ளது.இராணுவ தளபதி நரவேன அவர்களின் சௌதி மற்றும் எமிரேட்ஸ் நாடுகளுடனான பயணங்களை அடுத்து இந்த நாடுகளுடனான இந்திய உறவு அதிகரித்து வருகிறது.